சர்ச்சைக்குரிய சச்சார் அறிக்கை!
சச்சரவை கூட்டிவிட்டார் சச்சார்!
சச்சரவா அல்லது சர்க்கரையா?
சனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவருக்கு
சச்சார் அறிக்கை சர்க்கரை!
மதவாதத்தில் நம்பிக்கை கொண்டவருக்கு
சச்சார் அறிக்கை சச்சரவு!
சச்சரவை சச்சரவாக மாற்றினால்
மதவாதத்திற்கு வளர்ச்சி!
சச்சரவை சர்க்கரையாக மாற்றினால்
சனநாயகத்திற்கு வளர்ச்சி!
மதவாதத்தை அரசியல்வாதி காதல் கொண்டதால்
நாடு பிளவுபட்டு போனது!
மதவாதத்தை நீதிபதி காதல் கொண்டதால்
நீதி கேள்விக் குறியானது!
குற்றவாளிகள் பலர் பாராளுமன்றத்தின் பிரிதிநிதிகள்!
லஞ்சவாதிகள் பலர் நீதிமன்றத்தில் நீதியரசர்கள்!
பல முகங்களில் பல பதவிகளில் மதவாதிகள்!
பல மதவாதிகளின் திரைமறைவில் நீதிபதிகள்!
முகத்திரையை கிழிக்க வேண்டிய
கட்டாய கடமையில் சமூக ஆர்வலர்கள்!
கால ஓட்டத்தில் வெல்பவர் யார்?
காத்திருப்போர் பட்டியலில் – நாம்
இடம்பெற வேண்டாம்!
காலம் கடந்து போகும்!
போர்களம் நமக்கு புதிதல்ல! பொங்கியெழுவது புதிரல்ல!
வீறுகொண்டு புறப்படுவோம்! வீரமென குதித்திடுவோம்!
வெற்றிக் களிப்போடு திரும்பி வருவோம்!
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment